| குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்துக்கு கடும் தண்டனை Dinamalar
குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்துக்கு கடும் தண்டனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 மார்
2019
09:34

தர்மபுரி: 'குழந்தைகள் மீதான பாலியல் குற்றதில் ஈடுபடுவோர் மீது, போக்சோ உட்பட, கடுமையான தண்டனை அளிக்கப்படும்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தைகள் மீதான பாலியலில் ஈடுபடுவோர் மீது, இந்தியாவில் போக்சோ சட்டம் பாய்ந்து வருகிறது. பாலியல் துன்புறுத்தல், வன்முறை, சீண்டல், ஆபாச படம் எடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை, குற்றங்களாக, இச்சட்டம் முன் வைக்கிறது. இச்சட்டத்தில், பதியப்படும் வழக்குகளில், 30 நாட்களுக்குள், குழந்தையின் சாட்சியம் பதிவு செய்ய வேண்டும். ஓராண்டுக்குள், வழக்கு முடிக்கப்பட வேண்டும். தண்டனை நிரூபிக்கும் பட்சத்தில், சாதாரண சிறை தண்டனையில் இருந்து, கடுங்காவல் மற்றும் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். இதில், காவல், பாதுகாப்புப்படை, ராணுவம், அரசு அதிகாரிகள் போன்ற துறையில் இருந்து கொண்டு, பாலியல் குற்றத்துக்கு ஆளாவோர் மீது, கூடுதல் தண்டனை உண்டு. தர்மபுரி மாவட்டத்தில், குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு, 94867 31458, 04342 232234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X