எம்.பி.,க்களை நம்பி ஏமாந்த வேளச்சேரி மக்கள் விரக்தி! ஏரியை பாதுகாக்க முயற்சிக்கவில்லை என குற்றச்சாட்டு, தேர்தலில் வாக்குறுதிக்கு குறைவில்லை என, 'காட்டம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2019
02:13

'சென்னையின், முக்கிய நீர்நிலையான வேளச்சேரி ஏரியை பாதுகாக்க, இதுவரை பதவியில் இருந்த எம்.பி.,க்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, தென்சென்னை எம்.பி.,க்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதாக, வேளச்சேரி பகுதி மக்கள் புலம்புகின்றனர்.வேளச்சேரி ஏரி, 265.48 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடுவாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், இந்த ஏரியில் சேமிக்கப்படுகிறது.ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், 15 அடி அகல, வீராங்கால் கால்வாய் வழியாக, சதுப்பு நிலத்தை அடைகிறது.


கடந்த, 1989ல், குடிசை மாற்று வாரியம், 100 ஏக்கர் பரப்பளவு ஏரியை மூடி, சாலை ஓரம் வசித்த, 3,500 பேரை, இங்கு மறுக்குடியமர்வு செய்தது. 1992ல், வீட்டுவசதி வாரியம், 100 ஏக்கர் பரப்பளவு ஏரியை மூடி, வீட்டுமனையாக விற்பனை செய்தது. 2002ல், ஏரியை இரண்டாக பிரித்து, 150 அடி அகல சாலை அமைக்கப்பட்டது.இவ்வாறு, அரசு கையகப்படுத்திய இடம் போக, தற்போது, 55 ஏக்கர் பரப்பளவு ஏரி உள்ளது. ஏரியின், 80 சதவீதம் கரை, 20 சதவீதம் உள் பகுதியை, 600க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்துள்ளனர்.ஏரியை துார்வாரி, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஏரியில் கழிவுநீர் அதிகம் கலப்பதுடன், 8 அடி ஆழத்தில் சகதி உள்ளது.


இதனால், ஏரி நீர் பூமிக்குள் இறங்குவதில்லை. சுற்றுவட்டார பகுதியில், நிலத்தடி நீர், அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.10 ஆண்டுகளுக்கு முன், 100 அடியில் ஆழ்துளை கிணற்றில் வந்த தண்ணீர், தற்போது, 250 அடி தோண்டினால் தான் வருகிறது. ஏரியை சீரமைக்க, கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குவதாக, அரசு அறிவிக்கிறது.அதிகரிப்புமேலோட்டமாக படரும் ஆகாயத் தாமரையை அகற்றியதை தவிர, ஏரியை பாதுகாக்க, வேறு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


1993ம் ஆண்டு முதல், ஏரி ஆக்கிரமிப்பு துவங்கியது. தற்போது, பல மடங்கு அதிகரித்துள்ளது.இந்த காலக்கட்டத்தில், தென்சென்னை தொகுதியில், ஏழு பேர் எம்.பி.,க்களாக இருந்தனர். தி.மு.க.,வை சேர்ந்த டி.ஆர்., பாலு, நான்கு முறை எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார்.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஸ்ரீதரன், ராஜேந்திரன், ஜெயவர்தன் ஆகியோர், தலா ஒரு முறை, எம்.பி.,யாக இருந்தனர்.அதேபோல், வேளச்சேரி சட்டசபை தொகுதியில், இரு கட்சிகளும் மாறி மாறி, எம்.எல்.ஏ.,க்களாக இருந்துள்ளனர். இருந்தும், மக்கள் பிரதிநிதிகள், வேளச்சேரி ஏரியை பாதுகாக்க, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


ஒவ்வொரு, தேர்தலின் போதும், என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால், வேளச்சேரி ஏரியை பாதுகாப்பேன்; ஆக்கிரமிப்பாளர்களுக்கு, மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்; ஏரியை, சுற்றுலா தலமாக மாற்றுவேன்' என, ஜெயித்த ஒவ்வொரு எம்.பி.,யும், தொகுதி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர்.ஆனால், வெற்றி பெற்ற பின், ஏரியை பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுத்ததில்லை என்ற குற்றச்சாட்டு, இதுவரை இருந்த, ஏழு எம்.பி.,க்கள் மீதும் உள்ளது.ஏரி ஆக்கிரமிப்பில், தி.மு.க., அ.தி.மு.க.,வினர் பங்கு அதிகம். அவர்கள், 2 - 5 லட்சம் ரூபாய் வரை பெற்று, ஏரியில் வீடு கட்ட அனுமதித்துள்ளனர்.முறையீடுகடைகள் நடத்தியும் வருகின்றனர். ஏரிக்கரையில், உணவகங்கள் நடத்த விட்டு, பணம் பார்க்கவும் செய்கின்றனர். ஆக்கிரமிப்பில், இரு கட்சிகளும் ஒற்றுமையாக செல்படுவர்.பகுதிமக்கள், நலச்சங்கங்கள் மற்றும் நீர்நிலை ஆர்வலர்கள் என, தனித்தனியாக, எம்.பி.,க்களிடம், ஏரியை பாதுகாக்க முறையிட்டுள்ளனர்.


பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும்போது, ஆக்கிரமிப்புக்கு துணை போகும் கட்சியினர், எம்.பி., மற்றும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, தடுத்து விடுகின்றனர்.தன்னுடையை பெயரை, மக்களிடம் நல்ல விதமாக கொண்டு சேர்ப்பது; கட்சி தேர்தலில் தன் பலத்தை நிரூபிப்பது; உள்ளாட்சி, சட்டசபை தேர்தலில், கட்சியினரை பணி செய்ய வைப்பதற்கு, கீழ்மட்ட நிர்வாகிகள் தேவைப்படுவதால், ஏரி பாதுகாப்பில், எம்.பி.,க்கள் மவுனமாகி விடுவர். இதுவரை, ஏரி விஷயத்தில் இது தான் நடந்திருக்கிறது.இப்போதும் வேட்பாளர்கள், 'நான் வெற்றி பெற்றால், வேளச்சேரி ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்' என, பேசி வருகின்றனர்.


இதில், வெற்றி பெறும் எம்.பி.,யாவது, ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பாரா அல்லது ஏற்கனவே இருந்த எம்.பி.,க்களை போல் ஏமாற்றுவாரா என, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.ஏரியை பாதுகாக்க, 25 ஆண்டாக, ஒவ்வொரு, எம்.பி.,க்களையும் சந்தித்துள்ளோம். நம்பிக்கை தரும் வகையில் பேசுவர். அதிகாரியிடமும் பேசுவர். ஆனால், எந்த பயனும் இல்லை. கடைசியில், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் கட்சியினர் பேச்சை தான் கேட்பர். ஏற்கனவே இருந்த, எம்.பி., மீது, பழிபோட்டு தப்பித்துவிடுவர். ஜெயிக்கும், எம்.பி.,யாவது, ஏரியை பாதுகாப்பார் என, வழக்கம் போல நம்புகிறோம்.நலச்சங்கங்கள், நீர்நிலை ஆர்வலர்கள்


- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-201910:15:27 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நீங்கள் அளிக்கும் ஒவ்வொவொரு வாக்கும் ஏறிவிட விலைவாசியை பூமிக்கு கொண்டுவரவதற்க்காக மட்டும் இருக்கட்டும்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-201910:35:24 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்...
Rate this:
Rajendran Kulandaisamy - Kumbakonam,இந்தியா
29-மார்-201918:57:24 IST Report Abuse
Rajendran Kulandaisamyமலை மேல்தான் அணைகட்டி நீர் தேக்க வேண்டுமா?............ ஆற்றின் நீர் ஓட்டத்தை பிடித்து மட்டும் தான் நீர் தேக்க முடியுமா.........
Rate this:
Rajendran Kulandaisamy - Kumbakonam,இந்தியா
29-மார்-201919:35:25 IST Report Abuse
Rajendran Kulandaisamyமேட்டூர் அணையில் நீரை தேக்குகிறோம்... அண்டர் கிரவுண்ட் அணை ஏன் கட்ட கூடாது...... ஆம். மழை நீர் சேமிக்க.....
Rate this:
Manian - Chennai,இந்தியா
30-மார்-201903:11:40 IST Report Abuse
Manianராஜேந்திரன் : மணல் பாங்கான ஆற்று படுகைகளில் அணைகளை காடா முடியாது. அதை சுற்றி உள்ள எல்லா ஊர்களும் முங்கி விடும். மலை என்கிறாய், அதிக உயர சுவர்கள் கடடலாம். இரண்டு பககம் பாரி சுவர்கள் இருக்கும். பிராணிகள் , மரங்கள் அழியும். ஆனால் அது நாட்டுக்கு முன்பே பிராணிகள் தப்பி விடும். தண்ணிர் தரை வழியே கசியாது. தடுப்பணைகள் யுரம் குடிமாக இருக்க முடியாது. ஈக்கள், குளங்கள் வெட்டி தண்ணிரை சேர்க்கலாம் . புறம் போக்கு என்று லஞ்சம் கொடுத்து திருடிக்கொண்டு நிலத்தை யாரும் தர மாடடார்கள் . ஈவு, இரக்கம், பிரக்ருக்கு உதவி செய்தல் சம்மர் 85 % தமிழர்களுக்கு இன்று கிடையாது....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-201910:12:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நல்ல வாய்ப்பு இப்போ.. ஒடனே ஓடி போயி குப்பையை கொட்டு. சாக்கடையை கொட்டு. ஆக்கிரமிப்பு செய். செய்யிறவனை கேள்வி கேட்காதே. தண்ணி ஓட்டத்தை மறிச்சி சாலை போடு. ஏரியை ரோடு போட்டு ரெண்டா பிரி . அப்புறம் எட்டா பங்கு போடு. பிளாட் பிளாட்டா கூறு போடு. வாங்கி ரெண்டு மாடி வீடு கட்டு.. நாலு வீடு கட்டு.. மழை வரும். மழை தண்ணி வீட்டுக்குள்ளே வரும். சாக்கடை தண்ணி வீட்டுக்குள்ளே வரும்.. அப்ப மறுபடி கூவு. சத்தம் போடு..
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
29-மார்-201905:19:55 IST Report Abuse
Manian அது சரி, அங்கே ஒருவன் கூடவா சமூக ஆர்வலராக க முன் நின்று சோம்பேறிகளை இணைத்து சுய குழு மூலம் ஏரியை தூர்வார முடியவில்லை?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-201910:16:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நீங்கள் அளிக்கும் ஒவ்வொவொரு வாக்கும் ஏறிவிட விலைவாசியை பூமிக்கு கொண்டுவரவதற்க்காக மட்டும் இருக்கட்டும்...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-201910:36:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இத நான் எப்ப சொன்னேன்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X