என்னை விட பெரிய நடிகர்: துரைமுருகனை, 'கலாய்த்த' கமல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2019
00:01

திருவொற்றியூர்: ''என்னை விட பெரிய நடிகர் அவர்; நேர்மையின் காரணமாக, அவரை விட பெரிய அரசியல்வாதி நாங்கள்,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல்ஹாசன், தி.மு.க., துரைமுருகனை சூசகமாக கலாய்த்தார்.வட சென்னையில், மக்கள் நீதி மைய வேட்பாளர், மவுரியாவை ஆதரித்து, காசிமேடு, திருவொற்றியூர், ஆர்.கே.நகர், வியாசர்பாடி, ஓட்டேரி ஆகிய இடங்களில், அக்கட்சி தலைவர், கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, வேட்பாளரை ஓட்டு சேகரித்து பேசும்படி, அவர் கூறினார்.பின், பிரசாரத்தின் போது, கமல்ஹாசன் பேசியதாவது;எங்களை புது கட்சி என, மற்ற கட்சியினர் குழப்புவர். இது பிரதமரை மட்டும், தேர்வு செய்யும் தேர்தல் அல்ல. தமிழக குரல் எழ வாய்ப்பளிக்கும் அற்பு தமான தேர்தல். இதை கைநழுவ விடக்கூடாது.ஏழ்மையை, வெகு ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்திருக்கின்றனர் இந்த அரசியல்வாதிகள். ஏழ்மையை வைத்து தான், அவர்கள் பணப்பையை அதிகப்படுத்த முடியும்.வெட்கமே இல்லை. என்னை பார்த்து, 'அரசியல்வாதி இல்லை; நடிகன்' என, கூறினர். 'என்னிடம், 'ரெய்டு' விடுங்க பார்ப்போம்; என்னிடம் ஒன்றுமே இல்லை' என, கூறினர். நான் கூட, என்னை விட தைரியமாக குரல் கொடுக்கிறாரே, நேர்மையானவர் போலிருக்கே என, நினைத்தேன்.உண்மை என்னவென்றால், என்னை விட பெரிய நடிகர் அவர். நேர்மையின் காரணமாக, அவரை விட, பெரிய அரசியல்வாதிகள் நாங்கள். எங்களை வேலை செய்ய விடுங்கள்; தமிழகம் மாறுகிறதா, இல்லையா பாருங்கள். எங்களுக்கு நாற்காலி தேவையில்லை. நாங்கள் அமர போவதில்லை. நடத்தி காட்ட வேண்டிய கடமையை, நடத்தி காட்டும் வரை நடந்து கொண்டே இருப்போம்.தேர்தல் பிரகடனத்தில், யாரும் சொல்ல பயப்படும் வாக்குறுதியைசொல்லியுள்ளோம். ஐந்து ஆண்டுகளில், வீடுகள் தோறும், குடிநீரை கொண்டு சேர்க்க வேண்டியது எங்கள் கடமை. உங்கள் ஓட்டை விலை பேச விடாதீர்கள்; விலை பேசி விடாதீர்கள். ஓட்டுக்கு வாங்கும் பணத்தை கணக்கிட்டால், ஒரு நாள் சாப்பாட்டிற்கு கூட ஆகாது. உழைத்தால், பல்லாயிரம் சம்பாதிக்கலாம். அதற்கான வாய்ப்பை, மக்கள் நீதி மையம் ஏற்படுத்திக் கொடுக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.கஷ்டம் தராத பிரசாரம்கமலுக்கு கை கொடுக்குமா?மக்களை பாதிக்காத வகையில் செய்யப்படும், மக்கள் நீதி மைய பிரசாரம், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.முதல் முறையாக தேர்தலை சந்திக்கும், நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சி, தேர்தலில் வெற்றி பெற்று, மக்களுக்காக பட்ஜெட் போடுகின்றனரோ இல்லையோ, இவர்களின், பட்ஜெட் பிரசாரம்,மக்களிடையே வரவேற்பை பெற்றுஉள்ளது.வடசென்னையில், நேற்று பிரசாரம் செய்த கமலை வரவேற்க, தொண்டர்கள் யாரும் வேனில் அழைத்து வரப்படவில்லை. காதை கிழிக்கும், 'மைக் செட்' கட்டப்படவில்லை. 'சிடி பிளேயர்' கூட இல்லாமல், மொபைல் போனில், கமல் படப் பாடல்களை, ஒரே ஒரு, 'ஸ்பீக்கரில்' ஒலிக்க விட்டனர்.கொடிகளின் எண்ணிக்கை கூட, இரண்டு இலக்கத்தை தாண்டவில்லை. பட்டாசு, தோரணம் இல்லை. மகளிர் குத்தாட்டம் இல்லை; வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் இல்லை.மொத்தத்தில் பிரசாரம் நடந்த சுவடே இல்லாமல், கமல் பேசிக் கொண்டே போனார். இவர்களது வேட்பாளர்களோ, அதிகபட்சம் 10 பேருடன், துண்டுபிரசுரங்களை கொடுத்து, ஓட்டு கேட்டனர்.ஏமாந்து விடாதீர்கள்!துறைமுகம் அருகே கமல் பேசியதாவது:வடசென்னை தொகுதி வேட்பாளர் மவுரியா, நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தவர். உழைத்து களைத்து, ஓய்வு எடுக்க வேண்டிய இவர், உங்களுக்காக வந்துள்ளார். என் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற, கோபத்துடன் வந்துள்ளார். இப்படிப்பட்ட ஆட்களை தான், நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.எங்கள் மீது குறை இருந்து, புகார் கூறினால், ராஜினாமாவை அனுப்பி வைப்போம் என, சொல்லக்கூடிய தைரியம், எங்களுக்கு உள்ளது. உங்கள் குடிசையை காரணம் காட்டி, காசு திணிக்க, சிலர் வருவர்; ஏமாந்து விடாதீர்கள்.இவ்வாறு, கமல் பேசினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elangovan - TN,இந்தியா
04-ஏப்-201916:05:05 IST Report Abuse
elangovan This is the election after 5 year's you have power in your hand to vote for right people and throw out for corrupted party and corrupted peoples. Why should we support to corrupted people we want nate if some one party not doing good for people throw him in next election. Now new party MNM have no corruption in it. Vote and give him power to Nammavar .MNM. Changes makes life better MNM
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
04-ஏப்-201910:04:36 IST Report Abuse
Manian கமலு தம்பி, பெரியவர் விஞ்ஞான திருடர் கூட இருந்து நடிப்பு கற்றவர். குரு தட்சிணையாக எவ்ளோ கோடிகள் ஹவாலா அப்துல் வஹாப் மூலம் கொடுத்திருக்காரு. நீ என்னமோ பாப்பானை ஏசினா விஞ்ஞான திருடர் சிஷ்யனாக முடியமா? சில பல கோடிகளை வாங்கின சம்பளத்திலே தலைவருக்கு குரு தட்சினையா கொடுத்தியா? ஏகலைவனைப் போல ககட்டை வெரலை வெட்டிக்கினையா? சும்மா பெனாத்தாதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X