மனைவியுடன் தகராறு:: வாலிபர் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2019
07:23

சிதம்பரம்:மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.சிதம்பரம், பள்ளிப்படையை சேர்ந்தவர் சுந்தரம் மகன் மணிகண்டன், 25; மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டு மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் மஞ்சு கொடுத்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

வயிற்று வலி கொடுமையால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.சிதம்பரம் அருகே பாலுாத்தங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரமச்சந்திரன். அவரது மகன் முத்தமிழரசன், 28; வயிற்று வலி கொடுமையால் நேற்று விஷம் குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.இதுகுறிதது சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு



கம்மாபுரம் அருகே முதியவரை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிந்து, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கம்மாபுரம் அடுத்த கோட்டேரி ராகவன்குப்பம் தெருவை சேர்ந்தவர் காமராஜ், 51, அதே பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் தர்மன், 39. இருவருக்கும் குடும்ப பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. கடந்த 31ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதில், காமராஜை, தர்மன் சகோதரர்கள் ஆபாசமாக திட்டித் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.இது குறித்து புகாரின் பேரில், வெங்கடேசன், வேல்முருகன் உட்பட மூவர் மீது, ஊ.மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, தர்மனை கைது செய்தனர்.



பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்தவர் கைது



பெண்ணின் சம்பள பணம் ரூ.3.50 லட்சத்தை ஏமாற்றிய, முதியவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகள் தனசுந்தரி, 24; இவர் அதே பகுதியை சேர்ந்த பன்னீர், 50; என்பவரிடம், வேலை வாங்கி தருமாறு கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், தனசுந்தரியை திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்ற பன்னீர், அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி வேலைக்கு சேர்த்து விட்டார்.


இதையடுத்து, மாதந்தோறும் தனசுந்தரியின், சம்பளத்தை பன்னீர் வாங்கிக்கொண்டார். அந்த பணம் 3 லட்சத்து 50 ஆயிரத்தை திருப்பிக்கொடுமாறு, கடந்த 1ம் தேதி தனசுந்தரி மற்றும் அவரது தாய் சல்பா, 44; ஆகியோர் கேட்டுள்ளனர். அதற்கு பன்னீர் பணம் தர மறுத்து, இருவரையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து சல்பா கொடுத்த புகாரின்பேரில், திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து பன்னீரை கைது செய்து விசாரிக்கின்றனர்.



வாலிபர் தற்கொலை

கடலுார் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம், பூமாணம்பட்டி அகரத்தை சேர்ந்த சுரேஷ், 31; மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 3ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், பெரியகாளகாடு தனியார் நிறுவனம் அருகே சுரேஷ், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுரேஷ் மனைவி ரமாதேவி, 30; கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



லாட்டரி விற்ற 2 பேர் கைது

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன், பாதிரிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரகுபதி, 50; மற்றும் ரெங்கதாஸ், 60; ஆகியோர் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.இது குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து ரகுபதி, ரெங்கதாஸ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X