ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்ப தனியார் ஏஜென்சிகள் தயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2019
07:53

தஞ்சாவூர்: ஏ.டி.எம்., மையத்துக்கு எடுத்து செல்லும் பணத்தை குறிவைத்து, தேர்தல் பறக்கும் படையினர் பிடிக்கின்றனர். இதனால், பணத்தை, ஏ.டி.எம்.,மில் வைக்க அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் தயக்கம் காட்டுகின்றன. மக்கள் பணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.


தஞ்சாவூர் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், பணம் அதிகளவில் புழக்கமாவதை தடுக்க, தஞ்சாவூர் மாவட்டத்தில், 90 பறக்கும்படையின் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், ஆரம்பத்தில் சிறு வியபாரிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லை என கோரி, 50 ஆயிரம் ரூபாய் வரை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில், பறக்கும் படையினருக்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில், பெரிய அளவில் பணம் கொண்டு செல்வதை பிடித்து, தேர்தல் ஆணையத்திடம் நற்பெயர் வாங்க வேண்டும் என, உயர் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது. இதற்கு பின், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பெரிய அளவில் பணம் என்றால், ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் நிரப்ப கொண்டு செல்லும் வாகனங்கள் தான் என, அதன் மீது தங்களின் பார்வையை திருப்பினர்.அதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரங்களில் மட்டும், மாவட்டத்தில், ஐந்து இடங்களில், ஏ.டி.எம்., மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட, 2 கோடி ரூபாய் பணத்தை, உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், பணத்தை கொண்டு செல்லும் தனியார் ஏஜென்சிகள், தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின், பணத்தை நிரப்பலாம் என, தயக்கம் காட்டி வருகின்றன. இதனால், பல, ஏ.டி.எம்.,களில் பணம் இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை பார்க்கும் போது, 2016, நவம்பர், 8க்கு பின், மக்கள் அவதிப்பட்டதை நினைவு கூருவது போல் உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X