குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
00:45

கடலுார்:கடலுாரில், கிறிஸ்தவர்கள் பங்கேற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு உள்ள நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலம் கடந்த மார்ச் 6ம் தேதி துவங்கியது. தவக்காலத்தில் நேற்று, குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி, கடலுாரில் உள்ள புனித கார்மேல் அன்னை ஆலயம், கம்மியன் பேட்டை புனித சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில், நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.சிதம்பரம் சிதம்பரத்தில் நேற்று காலை, சிதம்பரம் காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்ட குருத்தோலை பவனிக்கு, பங்குதந்தை சூசை அடிகளார் தலைமை தாங்கினார்.


முக்கிய வீதிகள் வழியாக சென்ற பவனியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.குருத்தோலை பவனி, கனக சபை நகரிலுள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை, பங்கு பேரவையினர், வின்சென்ட் தேவபவுல் சபை, மரியாயின் சேனையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X