| வடவாற்றில் பெண் உடல் போலீசார் விசாரணை Dinamalar
வடவாற்றில் பெண் உடல் போலீசார் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:13

காட்டுமன்னார்கோவில்:வடவாற்றில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கு கடந்த சில நாட்களாகவே கீழணையில் இருந்து தண்ணீர் வரத்து இருந்தது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஏரி நிரம்பியது. இந்நிலையில் நேற்று மாலை வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் முக்கிய வழியான வடவாறு ஜீரோ பாயின்ட் ஷட்டர் அருகே இறந்த நிலையில் ஒரு பெண் உடல் மிதந்தது. காட்டுமன்னார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இறந்த பெண்ணிற்கு 55 வயது இருக்கலாம் எனவும், கத்திரிப்பூ கலர் சேலையும் சிகப்பு கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.வடவாற்றில் குளிக்கும் போது தவறி விழுந்த் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X