| தேவாலயங்களில் கட்சியினர், போட்டி போட்டு பிரசாரம் Dinamalar
தேவாலயங்களில் கட்சியினர், போட்டி போட்டு பிரசாரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:27

திருவொற்றியூர்:தேவாலயங்களில் பிரார்த்தனை முடித்து வெளியேறும் கிறிஸ்துவர்களிடம், கட்சியினர், போட்டி போட்டு பிரசாரம் செய்தனர்.


லோக்சபா தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சியினர், அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மசூதிகளில் தொழுகை முடித்து வந்த, இஸ்லாமியர்களிடம் ஓட்டு சேகரிக்க, மசூதி வாயில்களை, கட்சியினர் மொய்த்திருந்தனர்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அனைத்து தேவாலய வாயில்களிலும், கட்சியினர் முகாமிட்டனர். குருத்தோலை ஞாயிறு தினமும் கொண்டாடப்பட்டதால், வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாகவே இருந்தது.இதை பயன்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி, கட்சியினர் ஓட்டு வேட்டையாடினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X