அமெரிக்க தூதரகத்திற்கு ஒப்புதல்: கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:34

சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரக வளாகத்தில், கூடுதல் கட்டடங்கள் கட்டுவது உள்ளிட்ட விரிவாக்க பணிகளுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது.தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கான, அமெரிக்க துணை துாதரக அலுவலகம், சென்னையில் அண்ணா சாலை - கதீட்ரல் சாலை சந்திப்பில் அமைந்துள்ளது.


இந்த இடத்தில், 1969 முதல் அமெரிக்க துணை துாதரக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டடம், 1960ல் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.இந்த வளாகத்தில், தென் மாநிலங்களுக்கான மக்கள், அமெரிக்க விசா பெறுவது, கல்வி, வேலை வாய்ப்பு தகவல்களை பெறுவதற்கு வருகின்றனர்.சேவைகள் அதிகரித்த நிலையில், இங்கு இட நெருக்கடி அதிகரித்து உள்ளது.


இதற்காக, இந்த வளாகத்தில், காலி நிலங்களை பயன்படுத்தி, கூடுதல் கட்டடங்கள் கட்ட, துாதரக நிர்வாகம் முடிவு செய்தது.இதற்கான விண்ணப்பத்தை, துாதரக நிர்வாகம், 2018ல் சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்பியது. பொதுவாக, துாதரக கட்டடங்களுக்கு, இருநாட்டு நல்லுறவின் அடிப்படையில், சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்குவது வழக்கம்.


இதன் அடிப்படையில், அமெரிக்க துணை துாதரக வளாகத்தில், புதிய கட்டடங்கள் கட்ட, ஒப்புதல் வழங்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல், அமெரிக்க துணை துாதரக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X