| இலவச பட்டா வழங்குவேன்: தி.மு.க, வேட்பாளர் வாக்குறுதி Dinamalar
இலவச பட்டா வழங்குவேன்: தி.மு.க, வேட்பாளர் வாக்குறுதி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

15 ஏப்
2019
11:26
பதிவு செய்த நாள்
ஏப் 15,2019 01:35


புதுச்சேரி:தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் வெங்கடேசன், சுப்பையா நகரில் ஓட்டு சேகரித்தார்.தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்., கூட்டணியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் வெங்கடேசன் நேற்று சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி பகுதிகளில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகி களோடு பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்ற பெண்கள், தங்கள் பகுதி சுடுகாடு சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும், சாலை, குடிநீர் வசதிகளைமேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதற்கு வேட்பாளர் வெங்கடேசன், என்னை வெற்றி பெறச் செய்தால், இப்பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, இப்பகுதி கோவில் இடத்தில் வசித்துவரும் மக்களுக்கு பட்டா வழங்கவும், படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X