மாணவி முகத்தில் குத்திய போலீஸ் :பொது மக்கள் கண்டித்ததால் ஓட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:40

தாம்பரம்:இருசக்கர வாகனம் மோதியதால், நடந்து சென்ற பெண் போலீஸ், கல்லுாரி மாணவியின் முகத்தில் குத்துவிட்ட சம்பவம், தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தாம்பரம், கடப்பேரியைச் சேர்ந்த, 20 வயதான கல்லுாரி மாணவி ஒருவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, புத்தகம் வாங்க, மேற்கு தாம்பரம், சண்முகம் சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்தார்.கூட்ட நெரிசல் காரணமாக, வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. அப்போது, நடந்து சென்ற, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர், கலைசுபா மீது, மாணவியின் வாகனம் லேசாக உரசியது.


ஆத்திரமடைந்த கலைசுபா, மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அதற்கு மாணவி, 'தவறுதலாக உரசிவிட்டது; மன்னித்து விடுங்கள்' எனக் கூறினார்.இருப்பினும், ஆத்திரம் குறையாத கலைசுபா, மாணவி முகத்தில் குத்தினார். இதில், மாணவி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதைக்கண்ட பொதுமக்கள், பெண் காவலரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அதற்குள், காவல் நிலையத்தில் இருந்து, சக காவலர்களை வரவழைத்த பெண் காவலர், பொது மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஒரு கட்டத்தில், மக்களின் சரமாரி கேள்விக்கு பதில் கூற முடியாமல், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம், தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X