| ரூ.10.5 லட்சம் மதிப்பு தங்க கட்டி பறிமுதல் Dinamalar
ரூ.10.5 லட்சம் மதிப்பு தங்க கட்டி பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:52

சென்னை:மலேஷியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 10.5 லட்சம் ரூபாய் மதிப்புஉள்ள தங்க கட்டிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 'பாட்டிக் ஏர்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 11:25 மணிக்கு சென்னை வந்தது.அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த முகம்மது சிகாபுதீன், 27, என்பவனை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.இதில், அவன் ஆசனவாயில் இருந்து, 321 கிராம் தங்க கட்டிகள், 10.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.


சுங்கத் துறை அதிகாரிகள், முகம்மது சிகாபுதீனிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சென்னைக்கு தங்கம் கடத்துவது தொடர்கிறது.சென்னை விமான நிலையத்தில், அடுத்தடுத்த நாட்களில், தங்கம் கடத்தல் அதிகரித்து வருவது, சுங்கத் துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில், கண்காணிப்பை இன்னும் தீவிரப்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X