'மாஜி' அரசு ஊழியருக்கு விடிவு கிடைத்தது புது வாக்காளர் அட்டை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:00

அடையாறு:ஓராண்டாக அலையும், ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு, வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த பெண் புகைப்படம் நீக்கப்பட்டு, புதிய, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டது.
அடையாறு மண்டலம், 174வது வார்டு, கிண்டி, ரேஸ் வியூ காலனியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், 68; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர்.


விண்ணப்பம்


கடந்த, 2017ல், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், வாக்காளர் அடையாள அட்டை கேட்டு, அவரது
புகைப்படத்துடன் விண்ணப்பித்தார். அதே ஆண்டு, அக்டோபர் மாதம், இவர் பெயரில் ஸ்மார்ட் கார்டு வந்தது.அதில், இவருடைய புகைப்படத்திற்கு பதில், வேறு யாரோ ஒரு பெண்ணின் புகைப்படம் சேர்க்கப்பட்டது.மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். ஓர் ஆண்டாகியும், இவர் புகைப்படம் பதித்த, வாக்காளர் அடையாள அட்டை வழங்கவில்லை.


இதனால், லோக்சபா தேர்தலில் ஓட்டுபோட முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.அவசர நடவடிக்கைஇதையடுத்து, சத்தியநாராயணனை அழைத்து, மாநகராட்சி அதிகாரிகள் பேசினர். ஏற்கனவே கொடுத்த மனுவை தேடி, அதில் உள்ள விபரங்கள் குறித்து விசாரித்தனர்.உடனே, அவசர நடவடிக்கையாக, இவரது
புகைப்படத்துடன், 'ஸ்மார்ட் கார்டு' அச்சடிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டனர். நேற்று முன்தினம், சத்தியநாராயணன், இ - -சேவை வழியாக, ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொண்டார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X