| காதலியை வெட்டிய காதலன் கைது 'மாஜி' எம்.எல்.ஏ., மீது பெண் போலீசில் புகார் Dinamalar
காதலியை வெட்டிய காதலன் கைது 'மாஜி' எம்.எல்.ஏ., மீது பெண் போலீசில் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:16

ஆர்.கே.நகர்:அ.ம.மு.க., பெரம்பூர் தொகுதி வேட்பாளரும், முன்னாள், எம்.எல்.ஏ.,வுமான வெற்றிவேல் மீது, பெண் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.


கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சேர்ந்த அபிராமி, 45, என்பவர், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகார் மனு:


என் வளர்ப்பு மகளுக்கு, 15 வயது ஆகிறது. என் மகளுக்கு, ஏற்கனவே மணமான ஒருவருடன், திருமணம் நடந்து விட்டதாகவும், அதற்கு, அ.தி.மு.க., பெரம்பூர் வேட்பாளர், ஆர்.எஸ்.ராஜேஷ் உதவியதாகவும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தன ரஞ்சினி பொய் செய்தி பரப்பினார்.
இதற்கு காரணமான, அ.ம.மு.க., வேட்பாளர், வெற்றிவேல், ஏற்கனவே பொய் புகாரில் கைதான தன ரஞ்சினி மற்றும் அவரின் தாய் சாந்தி, தந்தை முனிவேல் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும், வெற்றிவேல் துாண்டுதலில், பொய் செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X