| புளிய மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி Dinamalar
புளிய மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:21

வானுார்:கிளியனுார் அருகே, புளியமரத்தில் பழம் உலுக்கியபோது தவறி விழுந்தவர் இறந்தார்.கிளியனுார் அருகே கொந்தமூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் ஆறுமுகம், 43; விவசாயி; இவர் நேற்று மதியம் 1.15 மணிக்கு, கிராமத்தில் உள்ள ஏரிக்கரை புளியமரத்தில் பழம் உலுக்கினார்.அப்போது, திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக கூறினர். கிளியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X