| கவுதமசிகாமணிக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி Dinamalar
கவுதமசிகாமணிக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:22

கள்ளக்குறிச்சி:'கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் கவுதமசிகாமணிக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது' என தொகுதி பொறுப்பாளர் மணிமாறன் பேசினார்.


கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தியாகதுருகத்தில் நடந்த தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைகூட்டத்தில், தொகுதி பொறுப்பாளர் மணிமாறன் பேசியதாவது:அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். அதேபோல், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை முதல்வராக ஏற்க அனைவரும் தயாராகி விட்டனர். இந்த தாக்கம், வரும் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க.,வேட்பாளர் கவுதமசிகாமணியை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றுத்தரும்.வேட்பாளர் கவுதமசிகாமணியின் தந்தையான முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் நகரை பன்மடங்கு வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றதை மக்கள் நன்கு அறிவர். மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த விழுப்புரத்தை வளர்ந்த நகரங்களில் ஒன்றாக அவர் மாற்றியமைத்தார். தற்போது, அவரின் மகன் கவுதமசிகாமணி, இங்கு வெற்றி பெற்றதும் கள்ளக்குறிச்சியை சீர்மிகு நகரமாக மாற்றுவார் என்கின்ற நம்பிக்கை வாக்காளர்களிடம் உறுதியாக காணப்படுகிறது.விஜயகாந்த் வாக்குறுதிகளை நம்பி, இதற்கு முன், இப்பகுதி மக்கள் ஏமார்ந்து போனதுதான் மிச்சம். தற்போது, புதிய வாக்குறுதிகளோடு களமிறங்கியுள்ள தே.மு.தி.க., வேட்பாளர் சுதஷை யாரும் நம்பத் தயாராக இல்லை. அவர்கள் அமைத்துள்ள கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். தற்போதைய ஆளும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகளால் பாமர மக்கள் முதல் வணிகர்கள், வியாபாரிகள், விவசாயிகள், நெசவாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.புதிய மாற்றத்தை வரவேற்க தயாராகியுள்ள வாக்காளர்களின் மனநிலை மாற்றத்தால், தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் என்பதில் சந்தேகமில்லை. கவுதமசிகாமணிக்கு வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், ஓட்டு வித்தியாசத்தை பல லட்சத்திற்கு உயர்த்திட கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொய்வின்றி உழைத்து, சாதனை வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, மணிமாறன் பேசினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X