வீடுகளை இழந்து மரத்தடியில் வசிக்கும் மக்கள்:குளறுபடி அதிகாரிகளால் தேர்தலை புறக்கணிக்க முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:23

அம்பத்துார்:ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் என்று, கிராம நத்தம் இடத்தில் இருந்த வீடுகளை இடித்த, அதிகாரிகளின் குளறுபடியால், வாழ்வாதாரத்தை இழந்த, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, மரத்தடியில் வசிக்கின்றனர்.


ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி, அம்பத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கள்ளிக்குப்பம், கங்கை நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட, நான்கு நகர்களில், 300க்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டன.அவை, கொரட்டூர் ஏரிக்குள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன என, பொதுப்பணித் துறை மூலம், அவற்றின் உரிமையாளர்களுக்கு, ஆக்கிரமிப்பு அகற்றம், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
இதனால் மனமுடைந்த, அங்கு வீடு கட்டி வசித்து வந்த சண்முகம் என்பவர், கடந்தாண்டு, செங்குன்றம் அருகே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதையடுத்து, முத்தமிழ் நகரில், கிராம நத்தம் இடத்தில் வசித்து வந்தவர்களில், 60 பேர், பொதுப்பணித்துறை நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர்.அதில், 23 பேருக்கு வழக்கு சாதகமானது. மற்றவர்களின் வழக்கு, விசாரணையில் உள்ளது.


இந்நிலையில், 2018 அக்., 12ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, முத்தமிழ் நகரில் உள்ள, 130 வீடுகளும் அவசரமாக இடிக்கப்பட்டன.இதனால், அங்கு வசித்தவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, நடுத்தெருவுக்கு வந்தனர். தற்போது, தங்களுக்குரிய இடங்களில், சிறு தகர குடிசைகள் அமைத்தும், மரத்தடியிலும் வசிக்கின்றனர்.ஆனால், இந்தாண்டு, ஜன., 10ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம், மேற்கண்ட இடத்தில் வசிப்பவர்களுக்கு, எவ்வித இடையூறும் செய்யக் கூடாது என, சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், அம்பத்துார் தாசில்தார் சிராஜ் பாபு, அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், பொற்கொடி ஆகியோர், 'ஆளும் கட்சிக்கு ஓட்டளித்தால் மட்டுமே, இங்கு வசிக்க முடியும். நாங்களும் கண்டுகொள்ள மாட்டோம்; இல்லாவிட்டால் இங்கு இருக்க முடியாது' என, மிரட்டியதாக, மாநில தேர்தல் ஆணையத்துக்கும், மாவட்ட தேர்தல் அலுவலருக்கும், வீடுகளை இழந்தோர் புகார் செய்துள்ளனர்.


இது குறித்து, வீடுகளை இழந்தவர்கள் கூறியதாவது:அம்பத்துார், மாநகராட்சியான பின், நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. எங்களை போன்றவர்களை, ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அகற்றி விட்டு, பிரபலமான கட்டுமான தொழில் நிறுவனங்களுக்கு, ஏரியை, 'தாரை' வார்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


அதன் மூலம், அவர்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.நாங்கள், 1991ம் ஆண்டு முதல், அங்கு வசிக்கிறோம். இந்த இடத்தை, சைதாப்பேட்டை தாலுகா, வருவாய்த்துறை, கிராம நத்தமாக, சப் - டிவிஷன் செய்து கொடுத்தது.அதில், வீடு கட்டி வசிக்கிறோம். ஆனால், அம்பத்துார் தாலுகா அலுவலகம் பிரிக்கப்பட்ட போது, மேற்கண்ட இடத்தை, வருவாய்த்துறையினர் பதிவேற்றாமல், குளறுபடி செய்துள்ளனர். அதனால், நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆகிவிட்டோம்.


நீதிமன்ற உத்தரவையும் மீறி, வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள், ஆளும் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டுமென, எங்களை மிரட்டுகின்றனர். அதனால், நாங்கள், எங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை, சட்டப்படி அரசிடம் ஒப்படைத்து, லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


நிஜ ஆக்கிரமிப்பாளர்கள், 'குஷி!'


முத்தமிழ் நகரில் வீடுகள் இடிக்கப்பட்ட போது, அங்குள்ள கட்டட கழிவுகளை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆசியுடன், தனியார் சிலர், கட்டுமான பணிக்கு அள்ளிச் சென்றதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பில் உள்ள மூகாம்பிகை நகர், பாரத் நகரில் உள்ள வீடுகளை, அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னணியில், கணிசமான தொகை அதிகாரிகளுக்கு கை மாறியதாகவும் புகார் உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X