அ.தி.மு.க.,வின் அமைதிப்பூங்காவா?: தி.மு.க.,வின் ரவுடி ஆட்சியா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:23

கள்ளக்குறிச்சியில் பிரேமலதா ஆவேசம்

கள்ளக்குறிச்சி:'குறு நில மன்னர்களாக தி.மு.க., ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்ற பிரச்னைகள் இல்லாமல் மக்கள் நிம்மதியாக உள்ளனர்' என கள்ளக்குறிச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.


கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷை ஆதரித்து நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, மிகச்சிறந்த ஆட்சி. ஐந்து ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் மந்திரியாக இருந்த பொன்முடி, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக மாற்றினாரா. தனது செல்வாக்கு குறைந்துவிடும் என்ற சுயநலத்தில் பிரிக்கவில்லை. ஆனால், 3 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்துவிட்டார்.இந்த கூட்டணியில் பிரதமாக மோடி நிற்கிறார்; தி.மு.க., கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக யாரும் இல்லை. உங்கள் விலை உயர்ந்த ஓட்டுகளை வீணடிக்க வேண்டாம். உங்கள் விரலில் வைக்கும் கருப்பு மை, எதிரிகளுக்கு மரண அடியாக இருக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற்று, டில்லி சென்று அனைத்து தேவைகளையும் கேட்டு பெற்று வருவோம்.இந்த மண்ணின் மைந்தர் சுதீஷ், சிறந்தவர். படித்தவர், பண்பாளர், கடுமையான உழைப்பாளி. அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிராம மக்களை சுதீஷ் சந்தித்தார்; பொன்முடி மகன் சென்றாரா? ஒரு கூட்டம் போட்டுவிட்டால் போதுமா? பொது மக்களை நேரடியாக சந்திக்க வேண்டாமா?ஏற்கனவே தோல்வியடைந்த தி.மு.க., வேட்பாளர் மணிமாறனுக்கு, இந்த தேர்தலில் ஏன் வாய்ப்பு தரவில்லை. அப்போது வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதால், மணிமாறனை களத்தில் இறக்கி பொன்முடி பழிவாங்கி விட்டார். அதனால், அவர் கடனாளி ஆகி விட்டார். தற்போது, ஜெயித்து விடுவோம் என நினைத்து, தன் மகனுக்கு வாய்ப்பு பெற்று கொடுத்துள்ளார். பொன்முடியின் இந்த செயலுக்கு அவர், மண்ணைக் கவ்வுவது நிச்சயம். சுய நலவாதிகளுக்கு மக்கள் துணை நிற்க மாட்டார்கள். கடந்த தி.மு.க., ஆட்சிகளில் குறுநில மன்னர்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும், தி.மு.க., அமைச்சர்கள் இருந்தனர்.விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி.. நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. பழனிசாமி ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். அ.தி.மு.க.,வின் அமைதிப்பூங்கா ஆட்சி வேண்டுமா... தி.மு.க.,வின் ரவுடி ஆட்சி வேண்டுமா... கள்ளக்குறிச்சியில் சுதீஷ் வெற்றி பெற்று, ஒரு கேபினட் மந்திரியாக வருவது நிச்சயம். அவருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இந்த தொகுதியில் இருந்து ஒரு கேபினட் மந்திரி உருவாகினால், இந்த தொகுதி அனைத்து வசதிகளிலும் முன்னேற்றம் பெரும்.இடைத்தேர்தல், உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்பதால் உங்கள் உழைப்பு வீண் போகாது. நாம் தான், அடுத்து சேர்மன், கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர்கள். கேப்டன் நலமாக உள்ளார், அவர் பிரசாரத்திற்கு வருவார். நாளை (இன்று) சென்னையில் பிரசாரம் செய்கிறார்.கள்ளக்குறிச்சியில் நடக்கும் சுதீஷின் வெற்றி விழா கொண்டாட்டத்தில், கண்டிப்பாக கேப்டன் பங்கேற்பார். எங்களுக்கு மக்கள் பணம் பத்து பைசா கூட வேண்டாம். ஊழல், லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சியை அமைப்போம்.இவ்வாறு, பிரேமலதா பேசினார்.முன்னதாக, தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷை ஆதரித்து மணலுார்பேட்டை, தியாகதுருகத்திலும், அதைத் தொடர்ந்து, வடக்கநந்தல், சின்னசேலம் பகுதிகளிலும் பிரசாரம் செய்தார். அவருக்கு, அ.தி.மு.க., மாவட்டச் செயலர் குமரகுரு எம்.எல்.ஏ., மற்றும் தே.மு.தி.க., மாவட்டச் செயலர் வெங்கடேசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பார்த்தசாரதி, முன்னாள் நகராட்சி சேர்மன் பாலகிருஷ்ணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்கள் ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, அருணகிரி, நகர செயலாளர் பாபு, ஷியாம் சுந்தர், தே.மு.தி.க., அவைத் தலைவர் கோவிமுருகன், மாவட்ட பொருளாளர் கருணாகரன், தொழிற்சங்க தலைவர் தாமு சக்திவேல், செயற்குழு உறுப்பினர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, ஜெய்சங்கர், மாவட்ட துணைச்செயலாளர் அண்ணாதுரை, பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர் ரமேஷ், மாவட்ட செயலர் சரவணன், பா.ஜ., மாவட்டத் தலைவர் தாமோதரன், நகர தலைவர் சர்தார் சிங், த.மா.கா., மாவட்ட தலைர் கணேஷ், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் பாலசுந்தரம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X