துணைராணுவ படை கொடி அணிவகுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:25

திருக்கோவிலுார்:விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் துணை ராணுவ படையினர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒருசில வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 70 துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிக்கு வருகை தந்துள்ளனர்.இவர்கள் நேற்று காலை சந்தப்பேட்டை டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் இருந்து டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில் துணை ராணுவ படை அதிகாரி பிரசாந்த் குர்ஸி இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.ஏரிக்கரை மூலை, தெற்கு வீதி, கிழக்கு வீதி, கீழையூர் வழியாக சென்று சைலோமில் நிறைவடைந்தது.திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி உள்ளிட்ட உட்கோட்டத்தை சேர்ந்த ஏராளமான போலீசாரும் கலந்து கொண்டனர்.உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை பகுதியில் பாதுகாப்பு பணிக்கு, கர்நாடக மாநிலத்திலிருந்து 100 சிறப்பு அதிரடி படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் போலீசார் இணைந்து, கொடி அணிவகுப்பு நடத்தினர். டி.எஸ்.பி., பாலச்சந்தர் தலைமையில், இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம், திருவெண்ணைநல்லுார் ரோடு, உளுந்தாண்டார் கோயில் ஆகிய பகுதிகளில கொடி அணிவகுப்பு நடத்தினர்.அவலுார்பேட்டைஆரணி தொகுதியில், அமைதியாக 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தும் வகையில் அவலுார் பேட்டையில் போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். செஞ்சி டி.எஸ்.பி., நீதிராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா , சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.செஞ்சி :செஞ்சி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு கர்நாடக மாநில சிறப்பு காவல் படை போலீசார் 85 பேர் இன்ஸ்பெக்டர் ராஜி லங்கோட்டி தலைமையில் துப்பாக்கியுடன் வந்துள்ளனர். இவர்கள் செஞ்சியில் டி.எஸ்.பி., நீதிராஜ் தலைமையில் முக்கிய சாலைகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், ரேணுகாதேவி, சுதா மற்றும் சப்டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.மரக்காணம்மரக்காணம் பகுதியில் மக்கள் அச்சமின்றி ஓட்டுபோட வேண்டும் என்பதால், கோட்டகுப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது. மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் கோட்டகுப்பம் போலீசார் இனணந்து கூனிமேடு, அனுமந்தை தெருக்கள் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தினர். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செந்தில் வினாயகம், உட்கோட்ட தனிப்பிரிவு சப் இன்ஸ் பெக்டர் நாகராஜ், தனிப்பிரிவு ஏட்டு பிரதாப் உள்பட 110 போலீசார் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமார், விஜயகுமார் முன்னிலையில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கொடி அணிவகுப்பு துவங்கியது. இதில் துணை ராணுவத்தினர் 80 பேர் மற்றும் போலீசார் 20 பேரும் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய சாலை வழியாக காந்திநகர் வரை சென்று மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வந்தடைந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X