தமிழ் வருட பிறப்பு: சிறப்பு வழிபாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:27

திருக்கோவிலூர்:தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவர் திரிவிக்கிரமன் விஸ்வரூப தரிசனம், திருப்பாவை சாற்றுமறை, 9:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் கண்ணாடி அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.மாலை 5:00 மணிக்கு, வேணுகோபாலன் சன்னதியில் கருட சேவையில் தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அம்பாள் சன்னதியில் சிவானந்த வல்லி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு, வசந்தோற்சவத்தை முன்னிட்டு சுவாமி புறப்பாடு நடந்தது.கிழக்கு வீதி, ஆஞ்சநேயர் கோவிலில், காலை 7:00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம், முத்தங்கி அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு, அர்ச்சனை சிறப்பு வழிபாடுகள் நடந்தது.சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.சங்கராபுரம்சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, சங்கராபுரம் பகுதியில் உள்ள கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.சங்கராபுரம் கடைவீதி அரசமரத்தடி வினாயகர் கோவிலில், சித்திரை மாத பிறப்பையொட்டி, நேற்று காலை பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஆராதனை நடந்தது. அதையடுத்து, சுவாமிக்கு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.அதேபோல, சங்கராபுரம் சிவன் கோவில், பூட்டை மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை நடந்தது..காட்டுவனஞ்சூர் ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமர், சீதை, லஷ்மணர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X