மந்தம்! விழுப்புரம் மாவட்டத்தில் மது விற்பனை...டாஸ்மாக் நிர்வாகத்தின் தேர்தல் கணிப்பு 'புஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:31

-நமது நிருபர்-

விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தலையொட்டி, எதிர்பார்த்த அளவிற்கு மதுபானம் விற்பனை ஆகாததால், டாஸ்மாக் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் 221 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நகரப்பகுதியில் மட்டுமே லாபத்தை ஈட்டும் வகையில் 45 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இந்த கடைகள் மூலம் தினசரி 3 கோடி முதல் 3.50 கோடி ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. இதன் மூலம் மாதத்திற்கு சராசரியாக 90 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடந்த மார்ச் மாதம் 93 கோடி ரூபாய் அளவிற்கு சரக்கு விற்பனையானது.


கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளில் அதிக லாபம் ஈட்டும் வகையில், மாவட்டம் வாரியாக கூடுதல் மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில், புதிய மதுபானங்களும் அடங்கும். தேர்தல் என்றாலே, குடிபிரியர்களுக்கு, சரக்கும், பணமும், மட்டுமே நினைவுக்கு வரும். அந்தந்த கட்சி வேட்பாளர்கள், தொண்டர்கள் முதல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு வருபவர்கள் வரை, சரக்குகளை வழங்கி குஷிப்படுத்துவது வழக்கம்.இதுபோன்ற சூழ்நிலையில், லோக்சபா தேர்தல் நடப்பதற்கு இன்னும் 4 தினங்களே உள்ளது. ஆனால், இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், எதிர்பார்த்த அளவிற்கு மதுபானங்கள் விற்பனை ஆகவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை களை கட்டும்.இந்த மாதம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை 33 கோடி ரூபாய் அளவிற்கு தான் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது எப்போதுமே நடக்கக்கூடிய வியாபாரம் தான். தேர்தலை பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம், தீவிரம் காட்டியது. இருந்தபோதும், எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லாததால், டாஸ்மாக் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.புதுச்சேரி சரக்கு கடத்தலாபுதுச்சேரியில் இருந்து சரக்குகளை கடத்தி வந்து, விழுப்புரம் மாவட்டத்தில் பதுக்கி வைப்பது தொடர் கதையாகவே உள்ளது. தேர்தல் தருணத்தில், இது அதிகளவு பிடிபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு எதிர்மாறாக புதுச்சேரி சரக்கு கடத்தப்படுவது கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.புதுச்சேரி-விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள செக்போஸ்ட்டுகளில், தினசரி போலீசார் 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமான சரக்குகளை பிடிப்பது வழக்கம். ஆனால், இதுவரை சரக்குகள் சிக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.சரக்கு கடத்தும் தொழிலை செய்பவர்கள் சில மாதங்களுக்கு முன்பாகவே, போதுமான அளவிற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்து, சட்டசபை தொகுதி வாரியாக இருப்பு வைத்து விட்டனர்.


அதிக விலை கொடுத்து டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதை விரும்பாத, அரசியல்வாதிகள், புதுச்சேரி சரக்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, பிரசார தருணத்தில், தொண்டர்களின் தாகத்தை தணித்து வருகின்றனர். இது தெரியாமல், அதிக சரக்குகளை வாங்கி டாஸ்மாக் கடைகளில் ஸ்டாக் வைத்துக்கொண்டு, விற்பனையாகவில்லை என்று அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.அதிகாரிகள் கூறும் காரணம்டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் நேரங்களில் அதிகளவில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனையாவது உண்மை தான். இருப்பினும், இந்தாண்டு சொல்லும் அளவிற்கு வியாபாரம் கிடையாது. இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு, கள்ளக்குறிச்சி அல்லது விழுப்புரத்தில் ஒரு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தால், அப்பகுதியில் உள்ள ஒரு சில டாஸ்மாக் கடைகளில் அன்றைய தினம் மட்டும் வியாபாரம் கூடுதலாக இருக்கும். தற்போது தேர்தல் சமயமாக இருந்தாலும், எப்போதும் உள்ள விற்பனை மட்டுமே நடக்கிறது. தேர்தல் நடக்க இருப்பதையொட்டி மூன்று தினங்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இனி வியாபாரத்தை எதிர்பார்க்க முடியாது' என்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X