| சங்கராபுரத்தில் வாகன சோதனை ரூ. 3 லட்சம் பறிமுதல் Dinamalar
சங்கராபுரத்தில் வாகன சோதனை ரூ. 3 லட்சம் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:33

சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரு.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தனபால் தலைமையிலான குழுவினர், நேற்று காலை சங்கராபுரம் வட்டம் புதுபேட்டை கிராமத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். பைக்கில் வந்த புதுபேட்டையை சேர்ந்த நாராயணசாமி மகன் ராசேந்திரன், 42, என்பவர் உரிய ஆவணமில்லாமல் வைத்திருந்த ரு.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.மற்றொரு சம்பவம்ரிஷிவந்தியம் பறக்கும்படை அலுவலர் சாமிதுரை தலைமையில் மணலுார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் வாகன சோதனை நடத்தினர். பைக்கில் வந்த பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் மாணிக்கம், சிங்காரம் மகன் வெங்கடேசன் ஆகியோரிடம் சோதனை நடத்தினர். அவர்கள் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரு.1 லட்சத்தை பறிமுதல் செய்து, சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X