| திண்டிவனம் பகுதியில் விடிய விடிய சோதனை Dinamalar
திண்டிவனம் பகுதியில் விடிய விடிய சோதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:35

திண்டிவனம்:லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களே உள்ள சூழ்நிலையில் திண்டிவனம் பகுதியில் விடியவிடிய தீவிர வாகன சோதனை நடந்தது. லோக்சபா தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படைகளும், எஸ்.எஸ்.டி., எனப்படும் 33 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.திண்டிவனத்தில் ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் உதவி பொறியாளர்கள் திருமணிகண்டன், சுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு சங்கர் ஆகியோர் தலைமையில் மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டது. இதேபோல், மரக்காணம் தோட்டக்கலை பிரிவு அதிகாரி வெங்கடேசன், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உதவி பொறியாளர் பாஸ்கரன், வட்டார வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் மூன்று போலீசார் இடம் பெற்றுள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் திண்டிவனம் பகுதியில் விடியவிடிய தீவிர வாகன சோதனை நடந்தது. இதில் சைக்கிளில் செல்பவர்களை கூட போலீசார் விட்டுவைக்கவில்லை. வாகன சோதனையை விழுப்புரம் லோக்சபா தேர்தல் செலவின பார்வையாளர் டெபாஷிஸ் லகரி திடீரென ஆய்வு செய்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X