| திருப்போரூர் தொகுதியில் மட்டும் அரசியல் கட்சிகள் பிரசாரம் Dinamalar
திருப்போரூர் தொகுதியில் மட்டும் அரசியல் கட்சிகள் பிரசாரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:36

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக் சபாவை விட, திருப்போரூர் இடைத்தேர்தல் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே, அரசியல் கட்சி தலைவர்கள், அப்பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.


காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியிலும், திருப்போரூர் சட்டசபை இடைத்தேர்தலிலும், தி.மு.க., - அ.தி.மு.க., நேரடியாக மோதுகின்றன.காஞ்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் செல்வம், அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம், காஞ்சிபுரத்தில், தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டனர்; கிராம பகுதிகளில், பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.


மாவட்ட தலைநகராக விளங்கும் காஞ்சிபுரத்தில், அடிக்கடி, அரசியல் பொதுக்கூட்டம் நடக்கும். ஆனால், இந்த தேர்தலில், அதுபோல் நடக்கவில்லை.திருப்போரூர் பகுதிகளில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின், அதன் வேட்பாளர் இதயவர்மனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரும், அ.தி.மு.க., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து, மற்ற பகுதிகளில் பிரசாரம் செய்தனர்; காஞ்சிபுரத்தில் பிரசாரம் செய்யவில்லை.


அ.தி.மு.க., கூட்டணி கட்சியான பா.ஜ.,வில்கூட, தேர்தல் பிரசாரத்திற்கு யாரும் வரவில்லை. தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களையும், காஞ்சிபுரம் பகுதியில் காணவில்லை. இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரத்தில், நாங்கள் எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைத்து விடும்.


மற்ற பகுதிகளான செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதே போல், திருப்போரூர் சட்டசபை இடைத்தேர்தல் வெற்றியும் முக்கியம். அதனால் கூட்டணி கட்சி தலைவர்கள், அந்த பகுதிகளில் மட்டும், தீவிரமாக பிரசாரம் செய்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X