தேர்தல் விடுமுறைக்கு ஊதியம் கிடைக்குமா? ஊரக வேலை திட்ட பணியாளர்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:49

தேர்தலன்று, அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவது போல், ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கும், ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


லோக்சபா தேர்தல் வரும், 18ல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு நாளன்று, பணியின் காரணமாக, ஓட்டுப் போடாமல் இருப்பதை தவிர்க்க, பொதுத் துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவனங்களும், ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.


இருப்பினும், விடுமுறை அளிக்காத நிறுவனங்களை, தொழிலாளர் நலத்துறை கண்காணிக்க முடிவு செய்துள்ளது.இது ஒருபுறமிருக்க, தேர்தலன்று பணி விடுமுறை பெறும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு, ஒரு நாள் ஊதிய இழப்பு ஏற்படுகிறது.


அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, தேர்தலன்று வழங்கப்படுகிறது.ஆனால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு, தேர்தலன்று ஏற்படும் ஊதிய இழப்பை, தமிழக அரசு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 13 வட்டாரங்களில், 633 ஊராட்சிகளில், 4.5 லட்சம் பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணி புரிகின் றனர்.தேர்தலன்று, இவர்களுக்கு, ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும் என, அத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X