| வரதர் எழும் நடவாவி கிணறு சுத்தம் செய்யும் பணி தீவிரம் Dinamalar
வரதர் எழும் நடவாவி கிணறு சுத்தம் செய்யும் பணி தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:08

காஞ்சிபுரம்:அய்யங்கார்குளம் நடவாவி கிணற்றில், வரும், 19ம் தேதி, வரதராஜ பெருமாள் எழுந்தருள்கிறார். இதற்காக, கிணறு மற்றும் மண்படம் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.


காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் நடவாவி உற்சவம், வரும் வெள்ளிக்கிழமை, சித்ரா பவுர்ணமி அன்று நடைபெறுகிறது.இதற்காக வரும், 18ம் தேதி இரவு, கோவிலில் இருந்து பெருமாள் புறப்படுகிறார். மறு நாள் இரவு, அய்யங்கார்குளம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் எழுந்தருளி, திருமஞ்சனம் ஏற்கிறார்.பின், அப்பகுயில், பூமிக்கடியில் அமைந்துள்ள, அதாவது நடவாவி கிணற்றுக்கு பெருமாள் செல்கிறார்.


அங்கு, பெருமாள் பக்தி உலாத்தல் நடை பெறும். இவ்விழாவிற்காக, நடவாவி கிணற்றில் இருந்த தண்ணீர், முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது.கிணற்றின் உள் பகுதியில், நான்கு கால் மண்டத்தை சுற்றிலும், சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.நடவாவி கிணற்றில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அன்று இரவு, 11:00 மணி வரை இருப்பர். பின், அங்கிருந்து செவிலி மேடு பாலாற்றுக்கு செல்கிறார்.நடவாவி உற்சவத்தை காண, செவிலிமேடு, அய்யங்கார்குளம் உட்பட பல பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருவர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X