| தனியார் ஊழியரை தாக்கிய இருவர் கைது Dinamalar
தனியார் ஊழியரை தாக்கிய இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:12

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 24. தனியார் தொழிற்சாலை ஊழியர்.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, வேலை முடித்து, தன் இரு சக்கர வாகனத்தில், வீட்டுக்கு சென்றார்.


அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி, மோகன்ராஜ் விழுந்தார்.இதனால், இவருக்கும், எதிர் தரப்பு கோகுல், 25, சுபாஷ், 24, ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் சேர்ந்து, மோகன்ராஜை தாக்கி, மிரட்டியுள்ளனர்.


இதையடுத்து, அவரது புகாரையடுத்து, கோகுல் என்பவனை, சிவ காஞ்சி போலீசார் கைது செய்தனர்; சுபாஷ் தலைமறைவாகி விட்டான். இருவரும் பழைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X