வாடிப்பட்டி:வாடிப்பட்டி தாலுகாவில் கிடை அமர்த்தப்பட்டுள்ள ஆடு, மாடுகளின்தாகம் தணித்தநீர்நிலைகள்வற்றி வருவதால் கால்நடைகள் வளர்ப்போர் கவலையில் உள்ளனர்.
இந்த தாலுகாவிலுள்ள விளைநிலங்களில் மண் வளத்தை இயற்கை முறையில் அதிகரிக்க விவசாயிகள் கால்நடைகளை கிடை அமர்த்துகின்றனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரம் கிடை ஆடு, மாடுகள் வாடிப்பட்டி, சோழவந்தான், காடுபட்டியில் முகாமிட்டுள்ளன. இவைகள் தினமும் மேய்ச்சலுக்காக பல கி.மீ., துாரம் சென்று திரும்புகின்றன.
இவற்றின் தாகம் தணிக்க உதவியவடகரை, தென்கரை உள்ளிட்ட கண்மாய்கள்,குளங்கள் கோடை துவங்கிய நிலையில் வறண்டு வருகின்றன.தண்ணீர் பற்றாக்குறையால் கால்நடைகள்தவிக்கும் நிலையுள்ளது. இதனால் கால்நடைகள் வளர்ப்போர் கவலையில் உள்ளனர்.