| வெள்ளலூரில் வெற்றிலை பிரி திருவிழா Dinamalar
வெள்ளலூரில் வெற்றிலை பிரி திருவிழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:30

மேலுார்:மேலுார் அருகே வெள்ளலுாரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடந்த வெற்றிலை பிரி திருவிழாவில் வெற்றிலையை பெற்று விவசாயிகள் உழவுப்பணிகளை துவக்கினர்.



வெள்ளலுார் நாட்டிற்கு உட்பட்ட 62 கிராமங்களில் உள்ள 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்கள் தலைமையில் கிராம மக்கள் மந்தை கருப்பண்ண சுவாமி கோயிலில் கூடினர். கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் அம்பலகாரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன. அம்பலகாரர்கள் பொதுமக்களுக்கு அவற்றை பிரித்து வழங்கினர். வெற்றிலையை பெற்றவர்கள் தங்களுடைய பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பிறகு வயலுக்கு சென்று உழவு பணிகளை துவக்கினர்.


தும்பைபட்டியில் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு அம்பலகாரர்கள் தலைமையில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

பிறகுஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் முஸ்லிம் சமூகத்தினரால் வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டு உழவு பணி துவங்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X