| பழைய குழாய்களின் 'ஆரோக்கியம்' எப்படி? சொல்கிறது பிரான்ஸ் நாட்டின் 'இ-பல்ஸ்' Dinamalar
பழைய குழாய்களின் 'ஆரோக்கியம்' எப்படி? சொல்கிறது பிரான்ஸ் நாட்டின் 'இ-பல்ஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:35

கோவை:கோவையில், பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் தற்போதைய தரம், பிரான்ஸ் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.கோவையில் பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 'சூயஸ்' நிறுவனம் மூலம், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது.


இந்நிறுவனத்துடன், 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.முதல் ஆண்டு, நிர்வாகப் பணி மேற்கொள்ளப்படும்; நான்கு ஆண்டுகள் கட்டுமான பணி செய்யப்படும். 20 ஆண்டுகள், பராமரித்து செயல்படுத்தப்படும். தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது.பரீட்சார்த்த முறையில், ஆர்.எஸ்.புரம் வட்டாரத்தில் வழங்குவதற்கு குழாய் பதிப்பது, தொட்டி கட்டுவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. மற்ற பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள பகிர்மான குழாய்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிய வேண்டியுள்ளது.மாநகரப்பகுதியில் மொத்தம், 111 கி.மீ., துாரத்துக்கு, குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில், 55 கி.மீ., துாரத்துக்கு, இரும்பு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இவற்றை பதித்து பல ஆண்டுகளாகி விட்டது.


அதனால், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் கசிகிறது. பி.வி.சி., குழாய் மற்றும் சிமென்ட் குழாய்களை அகற்றி விட்டு, புதிய குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சி.ஏ., குழாய்களின் தரத்தை ஆய்வு செய்து, மோசமாக இருப்பின், புதிய குழாய் பதிக்கப்பட உள்ளது. குழாயின் தரத்தை ஆய்வு செய்ய, பிரான்ஸ் நாட்டில் இருந்து, 'இ-பல்ஸ்' மற்றும் 'ஸ்கேனர்' என்கிற இரு விதமான இயந்திரங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.


குறையை சொல்லி விடும் இ-பல்ஸ்!மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இ-பல்ஸ் இயந்திரத்தை, குழாயில் ஒரு கி.மீ., துாரத்துக்கு, 3 இடத்தில் சோதித்து பார்க்க வேண்டும். இதுவரை, 12 இடங்களில் ஆய்வு செய்துள்ளோம். இதுவரை எடுத்த ஆய்வு முடிவுகள் தெரிந்தபின், மற்ற பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்படும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X