| மருதமலை வனப்பகுதியில் தீ 60 ஏக்கர் எரிந்து சாம்பல் Dinamalar
மருதமலை வனப்பகுதியில் தீ 60 ஏக்கர் எரிந்து சாம்பல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:37

வடவள்ளி:மருதமலை வனப்பகுதியில், ஏற்பட்ட காட்டுத்தீயில், சுமார் 50 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானது.கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட காளையனுாரில், மலையடிவாரத்தை ஒட்டிய, பட்டா நிலத்தில், நேற்று முன் தினம் மாலை காட்டுத்தீ பிடித்தது. தீ மெல்ல மெல்ல பரவி, வனப்பகுதிக்குள் வந்தது. மலையில் புற்கள் காய்ந்து இருந்ததாலும், காற்று வேகமாக வீசியதாலும்,


தீ வேகமாக பரவியது.ஒரு மலைப் பகுதியையே கடந்து, மலையின் மறுபுறமான மருதமலை வனப்பகுதிக்கு வந்தது. மாலையில் மலை உச்சியில் இருந்த காட்டுத்தீ, சிறிது நேரத்திலேயே, மருதமலை வனப்பகுதிக்குப்பட்ட, மூணுகல் பகுதி முழுவதும் பரவியது.கோவை வனச்சரக வனவர் சாரா சாகுல் தலைமையில், 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர், இரவு முழுவதும் போராடி, நள்ளிரவுக்கு மேல் தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும், 60 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X