| கேரளா, ஆந்திரா இருக்கும்போது கவலை எதுக்கு மீன் பிரியர்களே! Dinamalar
கேரளா, ஆந்திரா இருக்கும்போது கவலை எதுக்கு மீன் பிரியர்களே!
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:40

கோவை:தமிழகத்தில் இன்று முதல் மீன்பிடி தடை காலம், அமலுக்கு வரும் நிலையில், விலை உயர்வை தடுக்க ஆந்திரா, கேரளாவில் இருந்து மீன்களை கொண்டு வர, வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி உள்ளிட்ட கடல் பகுதிகளில், ஆண்டுதோறும் இரண்டு மாத காலம் மீன்பிடித்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது


.இந்தாண்டு, இன்று முதல், ஜூன் 14ம் தேதி வரை, மீனவர்கள் விசைப்படகுகளுடன் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மீன் வியாபாரிகள் கூறுகையில், 'கோவைக்கு தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மண்டபம், சென்னை, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, தினமும், 500 டன்னுக்கும் அதிகமாக மீன்கள், விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்துள்ளதால், கோவைக்கு வரும் மீனின் அளவு குறையும்; விலை உயரும். இதை சமாளிக்க, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து, கூடுதலாக மீன்களை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X