| தேர்தலில் யாருக்கு 'தலைமை' தீர்மானிக்க வந்தது அழியாத மை! Dinamalar
தேர்தலில் யாருக்கு 'தலைமை' தீர்மானிக்க வந்தது அழியாத மை!
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:41

கோவை:ஓட்டளித்த வாக்காளர்களுக்கு, விரலில் அடையாளம் இடுவதற்கான அழியாத மை, நேற்று கோவை கொண்டு வரப்பட்டது.கோவை, பொள்ளாச்சி என இரு எம்.பி., தொகுதிகளை கொண்ட கோவை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில், 3070 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் நடத்த தேவையான ஸ்டேஷனரி, மின்னணு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டு இயந்திரம் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.கடைசியாக, வாக்காளர்களுக்கு விரலில் அடையாளம் இடுவதற்கான அழியாத மை, நேற்று சென்னையில் இருந்து, கோவை வந்து சேர்ந்தது. மொத்தம் 7,680 மை பாட்டில்கள் வந்துள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், தலா 10 எம்.எல்., பாட்டில்களில் மை வழங்கப்படும் என்றும், இது தவிர, அரை பாட்டில் மை தனியாக வழங்கப்படும் என்றும், அலுவலர்கள் தெரிவித்தனர்.'


மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்' என்ற கர்நாடக அரசு பொதுத்துறை நிறுவனம் மட்டுமே, இந்த அழியாத மையை தயாரிக்கிறது. இந்நிறுவனத்திடம் இருந்து, அழியாத மையை கொள்முதல் செய்த தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் அலுவலகங்கள் வழியாக, மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X