செய்தி சில வரிகள் பகுதிக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:45

விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை


திருத்தணி: திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் நாளில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், நேற்று, சித்திரை மாதம் முதல் நாள், மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி, கோவில் வளாகத்தில், அதிகாலை, 5:00 மணிக்கு, யாகசாலை அமைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. உற்சவர் விநாயகர், சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாக உட்புறத்தில், மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


1,008 பால்குட ஊர்வலம்


திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, தமிழ் புத்தாண்டையொட்டி, காலை, 8:00 மணிக்கு, ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து, பக்தர்கள், 1,008 பால்குடம் தலையில் சுமந்தவாறு, ஊர்வலமாக கோவில் வளாகம் அடைந்தது.காலை, 9:30 மணி முதல், நண்பகல், 11;00 மணி வரை, மூலவர் அம்மனுக்கு, பால்குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இதில், திருத்தணி மற்றும் மத்துார் உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மூலவர் அம்மனை வழிபட்டனர்.


தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு


உத்திரமேரூர்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வம், சாலவாக்கம், எடமச்சி, பொற்பந்தல் உட்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், பிரசாரம் செய்தார். தி.மு.க மாவட்ட செயலர் சுந்தர், ஒன்றிய செயலர் குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.பா.ஜ., கொடி இடம் பெற்றதுகல்பாக்கம்: கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில், குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இப்பகுதியில், அ.தி.மு.க., கூட்டணி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.இதில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ., கொடியை, சிலர் அகற்றினர். இது குறித்து, பா.ஜ., அளித்த புகாரையடுத்து, ஆர்.டி.ஓ., முத்துவடிவேலு தலைமையில், இருதரப்புக்கும் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.இதையடுத்து, இப்பகுதியில், பா.ஜ., கொடி, மீண்டும் நடப்பட்டுள்ளது.


வரும், 17ல் கும்பாபிஷேகம்


காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் மாட வீதியில், பழமையான அபிராமீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு, இன்று விக்னேஸ்வர பூஜையுடன், கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. கும்பாபிஷேக தினமான, ஏப்., 17ல், ரத்னகிரி பாலமுருகடிமை சுவாமிகள் முன்னிலையில், காலை, 6:00 மணிக்கு, விமானம் மற்றும் மூலவர் உட்பட அனைத்து மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.காலை, 9:00 மணிக்கு மஹா அபிஷேகமும், 11:00 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X