திருத்தணி முருகன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:47

திருத்தணி,:தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு தரிசனம் நேற்று நடந்தது. பக்தர்கள், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி, நேற்று முன்தினம் இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தங்கவேல், தங்க கிரீடம், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.


நேற்று காலை, 9:00 மணிக்கு, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலம் துவங்கி, மலை கோவிலில் உள்ள, காவடி மண்டபத்தில் நிறைவடைந்தது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், அரக்கோணம் எம்.பி., அரி, ஆகியோர் பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், கேடய வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தமிழ் புத்தாண்டு மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். மாடவீதியில் ஆறாக ஓடிய அபிஷேக பால்உற்சவர் முருகப் பெருமானுக்கு காவடி மண்டபத்தில், 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. பால் வெளியேற தனி குழாய் உள்ளது. குழாய் உடைந்திருந்ததால், பால், கோவில் மாட வீதியில் வெளியேறி ஆறாக ஓடியது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால் என்பதால், பக்தர்கள் அதை மிதிக்காமல் செல்ல, சிரமப்பட்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X