| குருத்தோலை ஊர்வலம் Dinamalar
குருத்தோலை ஊர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:48

திருத்தணி:கிறிஸ்துவர்களின் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று, திருத்தணியில் நடந்தது.ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை, புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது.


சிலுவையில் அறையப்படும் முன் உள்ள நாட்களும், தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தில் குருத்தோலை ஞாயிறு தினமாகும்.இந்த தினத்தில், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள், குருத்தோலையை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக செல்வது உண்டு.


அந்த வகையில் நேற்று, திருத்தணி - அரக்கோணம் சாலையில், கிறிஸ்துவர்கள் குருத்தோலைகளுடன் ஊர்வலம் நடத்தினர்.இதில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குருத்தோலைகளை கைகளில் பிடித்தபடி சென்றனர். பின், அரக்கோணம் சாலையில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ கோவிலில், சிறப்பு பிரார்த்தனைகள் வழிபாடு நடந்தது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X