| வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வினியோகம் Dinamalar
வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வினியோகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:49

திருத்தணி:லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க, வாக்காளர்களுக்கு அரசு அலுவலர்கள் சார்பில், வீடு, வீடாக சென்று, 'பூத் சிலிப்' வழங்கப்பட்டு வருகிறது.


அரக்கோணம் லோக்சபா தொகுதியில், 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், பவணந்தி, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு வார்டுகளில், பூத் சிலிப் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டார்.இ


தையடுத்து, திருத்தணி சட்டசபை தொகுதி உட்பட்ட திருத்தணி நகரத்தில், நேற்று, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.இதற்கான, வாக்காளர்களுக்கு, தங்களது புகைப்படம், ஓட்டுச்சாவடி இடம் மற்றும் செல்லும் வழி குறித்தான தகவல் அடங்கிய பூத் சிலிப், தேர்தல் ஆணையரால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள், வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.


மேலும், வாக்காளர்களிடம் ஓட்டு போடுவதற்கு கொண்டு வர வேண்டிய, 11 ஆவணங்களில், ஏதாவது ஒன்று கண்டிப்பாக கொண்டு வந்து, நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X