'விகாரி' தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு கோலாகலம்! கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 ஏப்
2019
07:01
பதிவு செய்த நாள்
ஏப் 15,2019 04:50

திருப்பூர்:விகாரி' தமிழ் புத்தாண்டு பிறப்பான நேற்று, திருப்பூர் மாவட்ட கோவில்களில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.சித்திரை தமிழ்மாத பிறப்பு, தமிழ் புத்தாண்டு நாளாக கொண்டாடப்படுகிறது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், வீரராகவப்பெருமாள் கோவில்களில், கூட்டம் அலைமோதியது.



காலை முதல் இரவு கோவில் நடைசாத்தும் வரையிலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். திருப்பூர் நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், அவிநாசி, கொடுமுடி, பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து அபிேஷகம் செய்தனர்.'விஷூ' கோலாகலம்மலையாள மக்கள் சித்திரை மாத பிறப்பை, 'விஷூ' விழாவாக கொண்டாடுகின்றனர்.



திருப்பூர் காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், அதிகாலை முதல் ஐயப்ப சுவாமிக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில், குழந்தை கிருஷ்ணனர் சிலையை மையத்தில் வைத்து, பெரிய அத்தப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி வைத்து வழிபட்டனர்.திருப்பூர் எம்.எஸ்., நகர், நாகாத்தம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவிலில், கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, அபிேஷகம் நடந்தது.



சிறப்பு அலங்காரபூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், தமிழ்ப்புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், பல்வேறு திரவியங்களால், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கனி அலங்காரத்துடன், முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்தம்பலம் நவக்கிரஹ கோட்டை, காரணப்பெருமாள், மாகாளியம்மன், மாரியம்மன், பொன்காளியம்மன், தண்டாயுதபாணிசுவாமி கோவில், மற்றும் அருளானந்த ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X