| எதுக்கெடுத்தாலும் அபாய சங்கிலியா? ரயில் பயணிகள் மீது வழக்கு குவியுது Dinamalar
எதுக்கெடுத்தாலும் அபாய சங்கிலியா? ரயில் பயணிகள் மீது வழக்கு குவியுது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:51

திருப்பூர்:சென்னை வழியாக செல்லும் ரயில்களில் சரியான காரணம் இல்லாமல் அபாய சங்கிலி இழுத்து ரயில்கள் நிறுத்துவது அதிகரித்துள்ளது. அவசியமின்றி ரயிலை நிறுத்தியதாக மூன்று மாதத்தில், 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஓடும் ரயிலில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏ.சி., படுக்கை வசதி, முன்பதிவு, பொது பெட்டிகள் அனைத்திலும் இந்த வசதி உள்ளது.


சேலம் வழியாக இயங்கும் சென்னை ரயில்களில் அடிக்கடி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் - சென்னை, சென்னை - மங்களூரு, கோவை - சென்னை, ைஹதராபாத் - திருவனந்தபுரம், பெங்களூரு - கன்னியாகுமரி, திருவனந்தபுரம் - டில்லி, பெங்களூரு - கொச்சுவேலி, கண்ணனுார் - பனஸ்வாடி, பாட்னா - எர்ணாகுளம் ரயில்களில் அபாய சங்கிலி இழுத்து ரயில் நிறுத்துவது அதி கரித்துள்ளது.கடந்த ஜன., முதல் மார்ச் வரை மூன்று மாதத்தில் சேலம் - ஈரோடு வழித்தடத்தில் அபாய சங்கிலியை இழுத்ததாக, 98 வழக்கு பதியப்பட்டுள்ளது. விதியை மீறிய பயணிகளிடம் இருந்து, 41 ஆயிரத்து, 750 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


மொபைல் விழுந்தால்...சேலம் கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணிக்கும் போது, ஜன்னல் ஓர இருக்கையில் துாங்கும் போது செல்போனை ரயிலில் இருந்து கவனக்குறைவால் தவறி விட்டு விடுகின்றனர். செல்போனை எடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக அபாய சங்கிலியை பிடித்து இழுக்கின்றனர்.ரயில் நிறுத்தப்பட்டு விசாரணை நடக்கும் போது, இந்த விபரம் தெரிய வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கும் ரயிலை முறையற்ற காரணங்களால் நிறுத்துவது வருந்ததக்கது. ரயிலில் பயணிக்கும் போது அவரவர் பொருளை, அவரவர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X