| சீரான குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து சாலை மறில் Dinamalar
சீரான குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து சாலை மறில்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:57

திருத்தணி:ஒரு மாதமாக சீரான முறையில், குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து, சாலை மறியலில் நேற்று மக்கள் ஈடுபட்டனர்.திருவாலங்காடு ஒன்றியம், என். என். கண்டிகை காலனியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் தெருக் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.


இந்நிலையில், போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டது. இதனால், சீரான முறையில் நிர்வாகம், குடிநீரை வினியோகம் செய்யவில்லை. அப்பகுதி மக்கள், தினசரி தேவைகளுக்கு, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.


இந்த நிலையில், நேற்று, அப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர், திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்ததும், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, டிராக்டர் மூலம் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X