தாராளம்!.. தேனி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள்... போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:00

தேனி:தேனி மாவட்டத்தில் பிரசாரம் என்ற பெயரில் தேர்தல் விதிமீறல்கள் தாராளமாக நடப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பலரும் காத்திருந்து அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



தேனி லோக்சபா, பெரியகுளம்(தனி), ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு வி.ஐ.பி.,கள் போட்டியிடுவதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள், பேச்சாளர்கள் படையெடுத்தபடி உள்ளனர். தெருமுனை பிரசாரம், ஓட்டு சேகரிப்புக்கு ஓரிரு வாகனங்களுக்கு அனுமதி பெறுகின்றனர். ஆனால் அனுமதி இல்லாத ஏராளமான வாகனங்கள் பின் தொடர்கின்றன. தெருமுனை பிரசாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களையும், தேர்தல் விதிகளையும் பின்பற்றுவது இல்லை.

அல்லிநகரம், தேனியில் பிரசாரம் நடந்தால் பிரதானமான மதுரை, திண்டுக்கல் ரோட்டை மறித்து இடையூறு செய்கின்றனர். பிரசாரம் துவங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே தொண்டர்கள் ரோட்டை மறித்து கூடுகின்றனர்.

இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

ஒருவழிப்பாதை தடுப்பு ஏற்படுத்தப்பட்ட ரோட்டில் ஒரு பகுதியை அடைத்து விட்டு மற்றொரு பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கின்றனர். குறுகிய ரோட்டில் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கி பலரும் தவிக்கின்றனர்.

இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என விதிவிலக்கு கிடையாது. அவற்றின் தலைவர்கள் வந்தபோது பலரும் சிரமப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதே நிலைதான். இதை கட்டுப்படுத்த அதிகாரிகளோ நடவடிக்கை எடுப்பது இல்லை.


பயணிகள் அவதி: தேனியில் இருந்து ஏராளமான ஆம்னி பஸ்கள் சென்னை, பெங்களூரூ, கோவை என நீண்ட துார நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. தினமும் பிரசாரம் காரணமாக இரவில் தாமதம் ஏற்பட்டு மணிக்கணக்காக காத்திருப்பதாக பயணிகள் புலம்புகின்றனர். பொதுக்கூட்டம், பிரசாரங்களுக்கு வருபவர்களுக்கு வெளிப்படையாக பணம் பட்டுவாடா தாராளம் காட்டப்படுகிறது என்ற புகாரும் உள்ளது.

அப்பட்டமாக விதிமீறல் நடக்கிறதே என அதிகாரிகளிடம் கேட்டால் மவுனத்தையே பதிலாக தருகின்றனர். பெயருக்காக சில வழக்குகள் மட்டும் செய்யப்படுகின்றன.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X