| திருத்தணி ரயில்வே பால பணி :போக்குவரத்து நெரிசல் Dinamalar
திருத்தணி ரயில்வே பால பணி :போக்குவரத்து நெரிசல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:00

திருத்தணி:திருத்தணி ரயில்வே மேம்பாலத்தின், இரும்பு துாண்களை, பகல் நேரத்தில் மாற்றி அமைக்கும் பணி நடந்ததால், திருத்தணி நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது


.திருத்தணி நகரத்தில் இருந்து, திருவள்ளூர், திருப்பதி செல்லும் மார்க்கத்தில், ரயில் நிலையம் அருகில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தின் இருபுறமும், இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த துாண்களால், பாலத்தின் மீது பாசஞ்சர், விரைவு ரயில்கள் செல்லும், அதிக சத்தம் மற்றும் பயணியர் மீது சிறுநீர், மலம் விழுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில் செல்லும் வரை சாலையில் வாகனங்கள் நிறுத்து விடுகின்றனர்.


இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.இதை தடுக்கும் வகையில், இரும்பு துாண்களை அகற்றி, சிமென்டால் ஆன, துாண்கள் பொருத்தும் பணி, நேற்று பகல் நேரத்தில் நடந்தது.இதனால், ரயில்வே பாலத்தின் கீழ் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துகள் நகரத்திற்குள் செல்வதற்கு கடும் சிரமப்பட்டனர். துாண்கள் மாற்றும் பணியால், ரயில் சேவை பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X