| துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு Dinamalar
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:01

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த துணை ராணுவத்தினர், நேற்று, கொடி அணிவகுப்பு நடத்தினர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 18ம் தேதி, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.


இதற்காக, மாவட்டத்தில், 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தவிர, 400 துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.இவர்களுடன், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நேற்று மாலை, துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார், கொடி அணிவகுப்பு நடத்தினர்.


ஆயுதங்கள் ஏந்திய காவலர்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் புறப்பட்ட இந்த அணிவகுப்பு, ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை உட்பட நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி, எஸ்.பி., பொன்னி உட்பட பலர் பங்கேற்றனர்.இதே போல், மணவாளநகர் அடுத்த, மேல்நல்லாத்துார், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளிலும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.


பெண் காவலர் மயக்கம்


திருவள்ளூரில் நடந்த கொடி அணிவகுப்பில், பெண் காவலர்கள், இசை வாத்தியம் வாசித்தபடி நடந்து சென்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது, கடும் வெயில் காரணமாக, பெண் காவலர் ஒருவர் மயக்கமடைந்தார். உடனடியாக மற்ற காவலர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அழைத்துச் சென்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X