சித்திரை திருநாள் விழா: கோவில்களில் சிறப்பு பூஜை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:05

உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், சித்திரை திருநாளையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சித்திரை முதல்நாள், வளம் பெருகவும், வாழ்க்கை செழிக்கவும், முக்கனிகளை வைத்தும், பொன் பொருள் வைத்தும் வரவேற்று வழிபடப்படுகிறது. உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களிலும், நேற்று கனி தரிசனத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.


பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகருக்கு பழங்களிலான மாலை அணிவித்து, சந்தனக்காப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது.சவுரிராஜ பெருமாள் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. நெல்லுக்கடை வீதி, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.குட்டைத்திடல் விநாயகர் கோவில், சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வ.உ.சி.,வீதி பெருமாள் கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு, சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள், திரளாக சென்று இறைவழிபாட்டுடன் புத்தாண்டை கொண்டாடினர்.


மடத்துக்குளம்சித்திரை திருநாளை முன்னிட்டு மடத்துக்குளம் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவில், கணியூர் ஐயப்பன் கோவில், கடத்துார், சோழமாதேவி, கொமரலிங்கம் கொழுமம் ஆகிய இடங்களிலுள்ள அர்ச்சுனேசுவரர், குங்கும வல்லி உடனமர் குலசேகரசாமி, லட்சுமி நாராயண பெருமாள்கோவில், காசிவிஸ்வநாதர், தாண்டேசுவரர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. இதில், திரளான மக்கள் பங்கேற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X