தேர்தலுக்கு மதுக்கடைகள் மூட உத்தரவு: மது பாட்டில்கள் பதுக்குவது அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:05

உடுமலை:தேர்தல் விற்பனைக்காக சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்குதல் அதிகரித்துள்ளது. நேற்று, 525 மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல், வரும் 18 ல் நடக்கிறது. தேர்தல் அமைதியாக நடப்பதற்காக, நாளை முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சியினர், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து வருகின்றனர்.


அதே போல், உடுமலை பகுதிகளில், சட்ட விரோதமாக செயல்படும் தனியார் மதுக்கடைகளிலும், டாஸ்மாக் மதுக்கடை பார்களிலும், மதுக்கடை மூடப்படும் சமயத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வகையில், மதுபாட்டில்களை, மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


நேற்று, பூலாங்கிணர் பகுதியில், உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சட்ட விரோதமாக, வீட்டிற்கு அருகில், மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த, பஞ்சலிங்கம்,53, கைது செய்தனர். அவரிடமிருந்து, 510 மது பாட்டில்கள், 15 பீர் பாட்டில்கள் என, 525 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X