| தர்பூசணி விலை கிலோ ரூ.14 Dinamalar
தர்பூசணி விலை கிலோ ரூ.14
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:07

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பால் தர்பூசணி விலை சரிவடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பழநியில் 300 எக்டேரில் தர்பூசணி சாகுபடியாகிறது.


திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு உள்ளூர் மட்டுமின்றி சேலம், கோவை, கர்நாடகாவில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை 10 டன் வரை விற்பனைக்கு வருகிறது. கோடை வெயில் வாட்டி வருவதால் தர்பூசணிக்கு மவுசு அதிகரித்துள்ளது. அதனால் இதன் விற்பனை களைக்கட்டி வருகிறது. சென்ற மாதம் ஒரு கிலோ ரூ.20 க்கு விற்றது. நேற்று வரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு ரூ.6 குறைந்து ரூ.14 க்கு விற்றது. ரோட்டோர கடைகளில் ஒரு துண்டு ரூ.10, தர்பூசணி ஜூஸ் ரூ.15 க்கும் விற்பனையாகிறது. விலை குறைவு மற்றும் உடல் உஷ்ணத்தை போக்கவல்லது என்பதால் மக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.


வியாபாரி ஒருவர் கூறுகையில்,' உள்ளூர் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து வழக்கத்தை விட கூடுதல் வரத்து வந்துள்ளது. அதனால் விலை வேகமாக சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது', என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X