| தேனியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் Dinamalar
தேனியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:08

தேனி:தேனி பங்களாமேடு ஆர்.சி., சர்ச் சார்பில் நேற்று குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடந்தது. பாதிரியார் ஜான் மார்ட்டின் தலைமையில் கள்ளர் சொசைட்டியில் இருந்து காலை 7:45 மணிக்கு குருத்தோலை ஏந்திய கிறிஸ்தவர்கள் சர்ச் வரை ஊர்வலம் சென்றனர். இதில் 500 பேர் பங்கேற்றனர். பின், சர்ச்சில் திருப்பலி நடந்தது.


*தேனி என்.ஆர்.டி., நகரில் உள்ள சி.எஸ்.ஐ., புனித பவுல் சர்ச்சில் சபைகுரு குருசேகர தலைவர் ஜேக்கப்வின்ஸ்லின் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது. என்.ஆர்.டி., நகரில் உள்ள சர்ச்சில் துவங்கி, பெரியகுளம் ரோடு, பழைய ஜி.ஹெச்., ரோடு, சமதர்ம புரம் சென்று, மீண்டும் என்.ஆர்.டி., நகர் சர்ச் வந்தடைந்தது. பின் குருசேகர தலைவர் ஜேக்கப் வின்ஸ்லின் தலைமையில் ஆராதனை நடந்தது. அதில் சிறப்பு செய்தியை இளையோர் திருசபை இணை இயக்குனர் ஜோசப் பால்சிங் வழங்கினார். ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X