திருமூர்த்தி அணையில் குவிந்த பயணிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:08

உடுமலை:தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று, திருமூர்த்திமலையில், கிராம கோவில்களுக்கு தீர்த்தம் எடுக்கவும், மும்மூர்த்திகளை தரிசிக்கவும் பக்தர்கள் திரண்டனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.


தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று, அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. தமிழ்ப்புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கோவில்களுக்கு தீர்த்தம்பஞ்சலிங்கம் அருவி, பாலாறு என தீர்த்த சிறப்பு வாய்ந்த அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, உடுமலை, பொள்ளாச்சி பகுதியிலுள்ள நுாற்றுக்கணக்கான கிராம மக்கள், வாகனங்கள் மூலம், திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க வந்தனர்.அருவி, ஆற்றில் நீர் குறைவாக இருந்ததால், திருமூர்த்தி அணையில், நீராடி, குடங்களில், தீர்த்தம் எடுத்துச்சென்று, தங்கள் கிராம கோவில்களில் அபிேஷகம் செய்து வழிபட்டனர். தீர்த்தம் எடுக்க திரண்ட மக்களால், திருமூர்த்தி அணை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.


போக்குவரத்து நெரிசல்தமிழ்ப்புத்தாண்டு தினத்திற்கு, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததோடு, தீர்த்தம் எடுக்க பல கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்ததால், திருமூர்த்திமலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வாகன நெரிசல் காரணமாக,, கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ்களிலும் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. போதிய போலீசாரும் இல்லாத நிலையில், வாகனங்கள் செல்ல முடியாமல், ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு முன்னதாகவே, வாகனங்கள், பஸ்கள் நிறுத்தப்பட்டு, மக்கள் நடந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X