| குழந்தைகள் உரிமை; விழிப்புணர்வு பிரசாரம் Dinamalar
குழந்தைகள் உரிமை; விழிப்புணர்வு பிரசாரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:13

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் முன், 'தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு' மற்றும் கோவை என்.எம்.சி.டி., சார்பில், குழந்தைகளுக்கான உரிமையினை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.இதில், அந்த அமைப்பினர், துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.


அவர்கள் கூறியதாவது:18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளே என்று, 2013ம் ஆண்டின் குழந்தைகளுக்கான தேசிய கொள்கை முகவுரை குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.இந்தியாவில் உள்ள குழந்தைகளின் உரிமையை உறுதி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக, இந்த விழிப்புணர்வு பிரசாரம் கடந்த, 25ம் தேதி சென்னையில் துவங்கப்பட்டது.சென்னை, மதுரை, கோவை, திருச்சி என நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, மூன்று குழுக்களாக பிரிந்து பிரசாரம் செய்யப்படுகிறது. அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாளை (16ம் தேதி) கோவையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X