| தமிழ் புத்தாண்டு தினத்தில் பணி ஊர்க்காவல் படையினர் மகிழ்ச்சி Dinamalar
தமிழ் புத்தாண்டு தினத்தில் பணி ஊர்க்காவல் படையினர் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:27

வால்பாறை:வால்பாறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை நகர், காடம்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்களிலும், போலீசார் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் குற்றசம்பவங்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.


இந்நிலையில், நான்கு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ஊர்க்காவல்படையில் பணிக்கு பணிபுரிய, 125 இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். முதல் கட்டமாக, 20 இளைஞர்களை தகுதி அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டு, தேவையான பயிற்சியும் அளிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, ஊர்க்காவல்படையினர் பணி அமர்த்தப்பட்டதால் மகிழ்ச்சி அடைத்தனர்.


போலீசார் பேசுகையில், 'மிகவும் துடிப்புடனும், சேவை மனப்பான்மையுடன் ஊர்காவல் படையினர் பணியாற்ற வேண்டும். ஓட்டுச்சாடிகளில் மிகவும் கவனமுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். குற்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X